search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசிபிக் பெருங்கடல்"

    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. #ShinzoAbe #JapanRussiapeace
    டோக்கியோ:

    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு அப்போது பதில் தெரிவிக்காத ஷின்ஸோ அபே,  தாய்நாடு திரும்பியதும் இதுதொடர்பாக  இன்று கருத்து தெரிவித்துள்ளார்.


    வரும் 20-ம் தேதி ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தன்னுடன் இந்த பதவிக்கு மோதும் வேட்பாளருடன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷின்ஸோ அபே, ‘ரஷியா அதிபர் தெரிவித்துள்ள கருத்துகளை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். முதலில் எல்லை பிரச்சனைக்கு தீர்வுகண்ட பின்னர் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் தயாராக இருக்கிறது’ என குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இருதரப்பு கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்படலாம் என ரஷிய அதிபரிடம் நான் நம்பிக்கை தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.  #ShinzoAbe #JapanRussiapeace 
    பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை 8.2 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. #Fijiquake
    சுவா:

    ஓஷியனியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தீவு கூட்டங்களை கொண்ட பிஜி நாடு அமைந்துள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், அருகாமையில் உள்ள டோங்கா நாட்டில் இருந்து 442 கிலோமீட்டர் மேற்கே பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


    லெவுக்கா மற்றும் ஓவாலாவ் தீவுகளுக்கு இடையே உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.19 மணியளவில் பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டத்தில் 559.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.2 அலகுகளாக பதிவாகியுள்ளது.

    இன்றைய நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்ததாகவும் லாவ் தீவு கூட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாகவும் தெரிகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. எனினும், அப்பகுதியில் கடல் அலைகள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்பாக காணப்படுவதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Fijiquake
    ×